அடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள் : இந்நூலானது அஷ்ஷேஹ் அப்துல்அஸீஸ் பின்மர்ஸூக்அத்தரீஃபீஅவர்கள் ஸிரியா மக்களுக்கு எழுதிய ஒரு மடலாகும் . இதில் ஒரு முஸ்லிம் அவசியம் அறிந்திருக்க வேண்டிய இறைநம்பிக்கை , இணைவைப்பு , இறைநிராகரிப்பு , தலைவர்களுக்குக் கட்டுப்படல் , நபித்தோழர்களின் சிறப்புக்கள் போன்ற இஸ்லாமிய நம்பிக்கையுடன் தொடர்புடைய பலதரப்பட்ட விடயங்களை நூலாசிரியர் விளக்கியுள்ளார் . அடிப்படை நம்பிக்கையுடன் தொடர்பான விடயங்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளதால் , இது ஸிரியா மக்களுக்கு எழுதப்பட்டாலும் அனைத்து முஸ்லிம்களும் அவசியம் வாசிக்க வேண்டிய பொதுவான ஒரு மடலாகத்தான் இருக்கின்றது .
1438ம் ஆண்டு ஐந்தாவது ஹதீஸ் மனனப் போட்டிக்காகத் தெரிவு செய்யப்பட்ட 90 நபிமொழிகளும் அதன் அறிவிப்பாளர் பற்றிய சிறு குறிப்பும், ஹதீஸிலிருந்து பெறப்படும் படிப்பினைகளும்
நபியவர்களின் தொழுகை, ஸலாம் கொடுத்த பின், உபரியான தொழுகை, கூட்டுத்தொழுகை, இசை, உருவம் வரைதல், தாடி சிரைப்பது கூடாது, ஆண்கள் ஆடையைத் தொங்க விடல், புகை பிடித்தல்
வணக்கம் என்ற அடிப்படையில் தரிசிக்க முடியாத இடங்கள், வணக்கம் என்ற அடிப்படையில் பொதுவாக தரிசிக்க வேண்டிய இடங்கள், பொதுவாக வணக்கம் செலுத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள் .