இறைவனுக்கு இணை கட்பிப்பவனோ, நெருப்பு வணங்கியோ அல்லது இஸ்லாத்தில் இருந்து மதம் மாறியவனோ அறுத்தவற்றை உண்ணுவதற்கு (ஹராம்) அனுமதிக்கப் பட்டதல்ல. ஷிஆக்கள் இது போன்ற கொள்கைக் கோட்பாடுகளை நம்புவதும், இவ்வாறான செயற்பாடுகளை புரிவதன் மூலம் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறி வெளியேறி யவனாக கருதப் படுவர். அவர் அறுக்கும் பிராணிகளை உண்பது ஹலால் ஆக மாட்டாது.
படைப்பினங்களில் மிகவும் சிறந்த இறைத் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் தோழர்களை விமர்சிப்பது, குறை கூறுவது, வெறுப்பது என்பன மிகப் பெரும் ஏமாற்றத்தையும், தோல்வியையும் ஏற்படுத்தி, இறையருளை விட்டும் தூர தள்ளி விடும் குற்ற செயலாக விளங்குகிறது